ரோஜா சீரியல் வில்லிக்கு குழந்தை பிறந்தது! அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்
roja serial
anu villi
roja anu
By Fathima
ரோஜா சீரியலில் வில்லியாக அசத்தி வந்த ஷாமிலி சுகுமாருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
ரோஜா சீரியலில் ஹீரோ- ஹீரோயினுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவர் ஷாமிலி சுகுமார்(அனு), இதற்காக சிறந்த வில்லி நடிகை என்ற விருதையும் பெற்றார்.
இந்நிலையில் கொரோனா காலம் என்பதாலும், தான் கர்ப்பமாக இருப்பதாலும் சீரியலிலிருந்து விலகினார்.
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக குழந்தையின் புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.