ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர் - சர்ச்சையான சம்பவம்

Roja Andhra Pradesh
By Sumathi Feb 10, 2023 07:07 AM GMT
Report

ரோஜாவின் செருப்பை அவரது ஊழியர் கையில் எடுத்து வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரோஜா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார்.

ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர் - சர்ச்சையான சம்பவம் | Roja Selvamani Slipper Was Taken By Her Employee

2009-ல் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ ஆனார். இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

சர்ச்சை

இந்நிலையில்,ஆந்திராவில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரையை பார்வையிட சென்றியிருந்தார். அப்போது, கடற்கரை மணலில் இறங்கி நடக்கத் தொடங்கிய அவர், திடீரென தண்ணீரில் இறங்கினார்.

ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர் - சர்ச்சையான சம்பவம் | Roja Selvamani Slipper Was Taken By Her Employee

அந்த நேரம் ரோஜா அணிந்து வந்த செருப்பை அவரது ஊழியர் கையில் வைத்து இருந்தார். அந்த சம்பவம் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.