Monday, Jun 16, 2025

கோவிலில் ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை - கணவர் இவரா?

Tamil Cinema Serials Marriage
By Sumathi 2 years ago
Report

சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரியங்கா நல்காரி

தெலுங்கானா, ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இவர், தெலுங்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவயா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

கோவிலில் ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை - கணவர் இவரா? | Roja Priyanka Nalkari Got Married Boyfriend

தொடர்ந்து, சுந்தர் சி இயக்கத்தில், தீயா வேலை செய்யனும் குமாரு, சம்திங், சம்திங், மற்றும் லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதனையடுத்து சினிமாவில் பெரிதளவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், ரோஜா என்ற சீரியல் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.

ரகசிய திருமணம்

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரை எளிய முறையில் கரம் பிடித்தார். அந்தப் படங்களையும் இன்ஸ்டகிராமில் வெளியிட்டிருந்தார்.

கோவிலில் ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை - கணவர் இவரா? | Roja Priyanka Nalkari Got Married Boyfriend

இவர்களது திருமணம் மலேசியா முருகன் கோயிலில் நடந்துள்ளது. இவரது காதலர் ராகுல் அங்கு நிறுவனத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.