திடீரென களத்தில் இறங்கி கபடி விளையாடிய ரோஜா
political
roja
kabadi
By Jon
பிரபல நடிகையும், நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா திடீரென களத்தில் இறங்கி கபடி விளையாடியதால் அப்பகுதி மக்கள் உற்சாகமடைந்தனர். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, ஆந்திர மாநிலத்தின் நகரி சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார்.
இந்நிலையில் நகரி பகுதியில், நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்த ரோஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் உற்சாகமடைந்த ரோஜா யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாடினார்.
இதனால் இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி பொது மக்களும் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.