மழை வெள்ள பாதிப்பு - முதல்வர் முக ஸ்டாலினுக்கு ரோஜா வழங்கும் அறிவுரை..!
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா தமிழகத்தில் அமைந்துள்ள வந்தவாசி ஸ்ரீருக்மாயி பாண்டுரங்கன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, தமிழகமும் ஆந்திராவும் மிக்ஜாம் புயலினால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று கூறி, தமிழகத்திற்க்கு மத்திய அரசு குறைந்த அளவே நிவாரண நிதி தந்துள்ளது என தெரிவித்தார்.
அறிவுரை
மழை பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவிற்கு மத்திய அரசு நிதி உதவி அளித்ததா? என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசின் உதவியினை நாடாமல் மாநில அரசுதான் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, மக்கள் மாநில அரசை நம்பிதான் வாக்களித்தனர் என்றும் மத்திய அரசை நம்பி அல்ல என்றும் தெரிவித்தார் ரோஜா.