கங்குலி, தோனி, கோலி செய்ய முடியாத சாதனையை அசால்ட்டாக செய்த ரோகித் சர்மா

viratkohli rohitsharma INDvWI
By Petchi Avudaiappan Feb 11, 2022 08:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனைப் படைத்துள்ளார். 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதனையடுத்து 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது. இதனிடையே முதல் முறையாக இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா பல சாதனைகள் படைத்துள்ளார். 

அதாவது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக கபில்தேவ், சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி, விராட் கோலி என பல ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்த போதும்  வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுவதுமாக கைப்பற்றியதில்லை. ஆனால் ரோகித் சர்மா அருமையாக செயல்பட்டுள்ளார்.