Friday, May 16, 2025

ரோகித் சர்மாவை நீக்க சொன்னாரா கோலி : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

viratkohli captaincy rohitsharma
By Irumporai 4 years ago
Report

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய துணைக் கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை நியமிக்க வேண்டும் என்று விராட் கோலி விரும்பியதாக செய்தி வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கு கோலி கேப்டன் பதவியில் தொடரமாட்டார். அவருக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் என்று பரவலாக செய்திகள் வெளியானது.

அதே சமயம் , கடந்த சில வாரமாக ரோகித் சர்மாவுக்கும், கோலிக்கு இடையே சிறு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கோலி திடீரென்று தன் பதவி விலகல் முடிவை அறிவித்தார்.

ரோகித் சர்மாவை  நீக்க சொன்னாரா கோலி : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் | Rohitsharma After Virat Kohli Captaincy

இந்த நிலையில்,பிடிஐ நிறுவனம் வெளியிட்ட செய்திப்படி, பிசிசிஐ தேர்வாளர்கள் குழுவிடம் பேசிய கோலி "ரோகித் சர்மாவுக்கு 34 வயதாவதால் அவரை ஒருநாள் போட்டியின் துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை நியமிக்க வேண்டும்.

மேலும் டி20 போட்டிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பன்ட்டை துணைக் கேப்டனாக்க வேண்டும். இந்த முடிவுகள் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ள வேண்டும்,என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது ஆனால் இது குறித்து பிசிசிஐ தரப்பில் எதுவும் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகவில்லை.