இந்திய அணி தோல்விக்கு ரோகித் சர்மா முக்கிய காரணம்: உண்மையை சொன்ன பவுலிங் கோச்

Rohit Sharma INDvNZ Ishan kishan
By Petchi Avudaiappan Nov 03, 2021 03:07 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சொதப்பலுக்கு ரோகித் சர்மாவுக்கும் பங்கு இருப்பதாக பேட்டிங் கோச் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் படுதோல்வியடைந்து கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணியின் மோசமான பேட்டிங், பீல்டிங், பௌலிங் ஆகியவற்றால் ரசிகர்கள் வீரர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். பலர் இது குறித்து தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதில் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றியதே காரணமாக அமைந்தது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - கே.எல்.ராகுல் களமிறங்கியதால்ரோகித் சர்மா 3வது வீரராகவும், விராட் கோலி 4வது வீரராகவும் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இஷான் கிஷானே சொதப்பியதால், வரிசை மாறி களமிறங்கிய மற்ற வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி தந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்றியதில் ரோகித் சர்மாவின் பங்கும் உள்ளது என அணியின் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், எங்கள் அணியின் திட்டங்களை கடந்த 2 போட்டிகளிலுமே செயல்படுத்த முடியவில்லை என்பது தான் வலிக்கிறது. சூர்யகுமார் யாதவுக்கு முதுகுப்பகுதியில் பாதிப்பு இருந்ததால் அவரை களமிறக்க முடியவில்லை. இதனையடுத்து ஒட்டுமொத்த அண் நிர்வாகமும் அடுத்ததாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை மேற்கொண்டோம். இதில் இளம் வீரர் இஷான் கிஷானை ஓப்பனிங் இறக்கினால் சிறப்பாக இருக்கும் என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் துணைக்கேப்டன் ரோகித் சர்மாவும் உடன் இருந்து சம்மதம் தான் தெரிவித்தார். இதன்மூலம் கோலியை தனிப்பட்ட விதமாக யாரும் விமர்சிக்க வேண்டாம் என மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளார்.