“பறிக்கப்படும் கேப்டன் பதவி” - இந்திய வீரருக்கு நேர்ந்த கதி

Ajinkya Rahane rohitsharma INDvNZ INDvSA
By Petchi Avudaiappan Dec 05, 2021 12:30 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியை ரஹானே இழக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிய, 2வது டெஸ்ட் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. 

முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருந்ததால் ரஹானே கேப்டனாக செயல்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்பி இருக்கும் வேளையில் ரஹானே காயம் காரணமாக விளையாடாமல் வெளியே அமர்ந்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ரஹானே இதுவரை 79 போட்டிகளில் விளையாடி 4,795 ரன்களை குவித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே அயல்நாட்டு மண்ணிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். 

“பறிக்கப்படும் கேப்டன் பதவி”  - இந்திய வீரருக்கு நேர்ந்த கதி | Rohith Likely Appointed Vice Captain In Test

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ரன் குவிக்க தடுமாறி வரும் இவர் துணை கேப்டன் பதவியில் இருப்பதால் மட்டுமே அணியில் நீடிக்கிறார் என்றும் அந்த பதவி இல்லை என்றால் அணியில் இருந்து எப்போதோ வெளியேற்றப்பட்டு இருப்பார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர், 

மேலும் ரஹானேவை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக புதிய வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.அதன்படி தற்போது அடுத்ததாக நடைபெற இருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு புதிய துணைக்கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இதனால் ரஹானேவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.