கோலி, ரோகித் கொடுத்த அடி; இனி பேச்சுவார்த்தையே இல்லை - கம்பீருக்கு சிக்கல்
பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2027 உலகக்கோப்பை
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 3 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 302 ரன்களை விளாசி தள்ளினார்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 38 வயதை எட்டியுள்ளனர். இதனால் 2027 உலகக்கோப்பை தொடரில் இருவரும் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் 2025 - 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இருவரும் ஓய்வை அறிவித்தனர்.
சிக்கலில் கம்பீர்
தென்னாப்பிரிக்கா தொடருக்கு பின் கோலி மற்றும் ரோகித் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் இருவரும் தயாராகி வந்தனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இவர்கள் இடம்பெறுவார்கள்.

அதேபோல் டெஸ்ட் மற்றும் டி20 அணிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கம்பீர், ஒருநாள் அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
அதற்கு சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.