பாகிஸ்தான் வீரரை பின்னுக்கு தள்ளி அடுத்தடுத்து பல சாதனைகள் படைக்கும் ரோகித் சர்மா
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரின் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொந்தமாகியுள்ளார். இலங்கை அணியுடனான மூன்றாவது டி20 போட்டி ரோகித் சர்மாவுக்கு 125வது போட்டி என்பதால், அதிக போட்டியில் விளையாடிய பாகிஸ்தானின் சோயப் மாலிக்(124 போட்டி) சாதனையை பின்னுக்கு தள்ளினார்.
இந்த தொடரில் தான் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.