விராட் கோலி,ரோஹித் சர்மா இடையே மோதல்- வெளியான பரபரப்பு தகவல்

Virat Kohli Rohit Sharma Ravi Shastri INDvsENG
By Thahir Sep 02, 2021 10:30 AM GMT
Report

விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி,ரோஹித் சர்மா இடையே மோதல்- வெளியான பரபரப்பு தகவல் | Rohit Sharma Virat Kohli Ind Vs Eng Ravi Shastri

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரவி சாஸ்திரி விராட் கோலி - ரோஹித் சர்மா இடையிலான மோதலை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. என்னிடம் பலரும் இதைப் பற்றி கேட்டபோது, நீங்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை என்றேன்.

இருவரிடமும் எப்போதும் ஒற்றுமை இருக்கும். இருவரிடமும் மோதல் இருந்தால் அதனால் இந்திய அணி பாதிப்படையவில்லை. அதனால் அணிக்குள் பாதிப்பு ஏற்பட்டால், இருவர் முகத்தின் முன்பு நேரடியாகச் சொல்லிவிடுவேன்

இது சரியல்ல, நீங்கள் வேறுவிதமாக இதைக் கையாள வேண்டும் என்று. ஆனால் இருவரால் அணியில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எனக்கு என்ன தேவையோ அதைச் சொல்லும் மனிதன் நான் என்று கூறியுள்ளார்.