தேம்பி தேம்பி அழுத ரோகித் சர்மா...ஆசுவாசப்படுத்திய விராட் கோலி - வைரலாகும் வீடியோ!

Rohit Sharma Indian Cricket Team T20 World Cup 2024
By Swetha Jun 28, 2024 06:58 AM GMT
Report

கேப்டன் ரோகித் சர்மா கண்ணீர் விட்டு கலங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

அழுத ரோகித் சர்மா 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில்  இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கயானாவில் நடைபெற்ற இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

தேம்பி தேம்பி அழுத ரோகித் சர்மா...ஆசுவாசப்படுத்திய விராட் கோலி - வைரலாகும் வீடியோ! | Rohit Sharma Tears Out Of Joy Video Went Viral

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 2 அபாரமான சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களை குவித்தார். பிறகு, சூர்யகுமார் யாதவ்,ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தங்களது அபாரமான விளையாட்டை வெளிப்படுத்தினர்.

இதன் மூலம், அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சில் திணறியது. இப்படியாக இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பார்ம் அவுட் கோலி - இறுதி போட்டியில் இல்லை!! சூசகமாக சொன்ன ரோகித்

பார்ம் அவுட் கோலி - இறுதி போட்டியில் இல்லை!! சூசகமாக சொன்ன ரோகித்

வைரலாகும் வீடியோ

இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் இந்திய வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். முன்னதாக பெவிலியன் சென்றிருந்த ரோகித் சர்மா,

தேம்பி தேம்பி அழுத ரோகித் சர்மா...ஆசுவாசப்படுத்திய விராட் கோலி - வைரலாகும் வீடியோ! | Rohit Sharma Tears Out Of Joy Video Went Viral

அங்கிருந்த டிரஸ்ஸிங் ரூம் கேலரியில் உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருந்தார்.மேலும், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் வந்தபோது ரோகித் சர்மா கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இந்தியாவும் இறுதிப் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.