‘கொஞ்சம் வாயை மூடுங்க’ - புஜாரா குறித்த கேள்விக்கு கடுப்பான ரோகித் சர்மா
புஜாரா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணி வீரர் ரோகித் சர்மா காட்டமாக பதில் அளித்துள்ளார்.
லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர் புஜாரா, 3வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் 91 ரன்கள் விளாசி பழைய பார்முக்கு திரும்பினார்.
இதனிடையே செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட ரோகித் சர்மாவிடம் புஜாராவின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புஜாராவை விமர்சிப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் அமைத்த பாட்னர்ஷிப்பை மறந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Puzzle iq test: Supermarket-ல் மறைந்திருக்கும் ஏலியன்- 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan
