கடைசி ஒரு நாள் போட்டி - சதம் அடித்து மாஸ் காட்டிய ரோகித், சுப்மன் கில் - குஷியில் ரசிகர்கள்...!

Rohit Sharma Cricket Shubman Gill
By Nandhini 1 வாரம் முன்

நியூசிலாந்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அடுத்தடுத்து சதம் அடித்து ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் மாஸ் காட்டியுள்ளனர். 

நியூசிலாந்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர். முதல் பந்திலிருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். நியூசிலாந்தின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டு தெறிக்க விட்டனர்.

இதனால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில், 20 ஓவர்களில் இந்தியா 165 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோகித் முதலாவதாக சதம் அடித்து அசத்தினார். பின்பு, சுப்மன் கில்லும் சதம் அடித்து மாஸ் காட்டினார். ரோகித் சர்மாவிற்கு இது 30வது சதமாகும். தற்போது இந்தியா 26 ஓவரில் 212 ரன்கள் குவித்துள்ளது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சதம் அடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.   

rohit-sharma-shubman-gill-cricketer-india