ரோகித் சர்மாவிற்கு காத்திருக்கும் அடுத்த சவால் - அதிர்ச்சி கொடுக்கும் முன்னாள் வீரர்
இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு சவால் ஒன்று காத்திருப்பதாக முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
இதில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போட்டியில் முதல்முறையாக ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்த உள்ளார். ஐபிஎல் போட்டியில், வெற்றிகரமான கேப்டன் என்ற பெயருடன் வலம் வரும் ரோகித் அதனை ஒருநாள் தொடரிலும் தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஒருநாள் மற்றும் டி 20 இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவிற்கு, என்னுடைய பார்வையில் மிகப்பெரிய சவாலாக இருக்கப் போவது அவருடைய பிட்னஸ் தான் என முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, கேப்டனாக இருந்த கோலி மற்றும் தோனி ஆகிய இருவரின் மிகப் பெரிய பலம் என்றால் அது பிட்னஸ் மட்டும் தான்.
அணியின் கேப்டன் என்றால், தொடர்ந்து ஆடிக் கொண்டே, அணியினருடன் இருக்க வேண்டும். எனவே இனி வரும் காலங்களில் ரோகித் சர்மா தன்னுடைய பிட்னஸில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அகர்கள் அறிவுறுத்தியுள்ளார்.