ஷாக் ஆகிட்டேன்; விராட் கோலியின் திடீர் முடிவு குறித்து பேசிய ரோஹித் சர்மா !!

Decision Shocked Virat Kohli Rohit Sharma
By Thahir Jan 16, 2022 04:22 PM GMT
Report

டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவாக விராட் கோலி அறிவித்த செய்தி கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, கடந்த 7 வருடத்திற்கும் மேலாக இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார்.

டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்சி மீது பல விமர்ச்சனங்கள் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட யாராலும் சிறப்பாக வழிநடத்த முடியாது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

விராட் கோலி இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர், ஆனால் விராட் கோலியோ திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிகொள்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.  

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி நாள் வரை ஆக்ரோஷமாகவும், உற்சாகமாகவும் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி வெறும் 24 மணி நேரத்தில் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விராட் கோலியின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் கோலியின் இந்த முடிவு குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மாவும் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் ஒரு கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தற்போது ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணியின் ஒயிட் பால் போட்டிக்கு (ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.