தோல்விக்கு இவர்தான் காரணமே - பளீச்சென்று சொன்ன ரோகித் சர்மா
மும்பை அணி தோல்வியடைந்தது குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார்.
MI vs LSG
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதிரடியாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 47 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 177 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, முதல் விக்கெட்டிற்கு கேப்டன் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் 90 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
ரோகித் ஆதங்கம்
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது சிறப்பாக பந்துவீசிய மொஹ்சின் கான் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் லக்னோவிடம் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
அதன்பின் பேசிய ரோகித் சர்மா, நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறிய முயற்சிகளையும் விட்டுவிட்டோம். இந்த பிட்சில் 178 என்ற ரன்களை நிச்சயம் சேஸ் செய்திருக்க வேண்டும்.
ஆனால் நாங்கள் ஆட்டத்தின் இறுதியில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். மேலும் எங்களின் துவக்கம் சிறப்பாக அமைந்தது. ஆனால் எங்களின் முடிவு சரியாக அமையவில்லை. லக்னோ வீரர் ஸ்டோய்னிஸ் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டார்.
ஆடுகளத்திற்கு ஏற்றவாறு ஸ்டோய்னிஸ் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றி கொண்டு விளையாடினார். அதுவே எங்களின் பின்னடைவுக்கு காரணம். நிச்சயம் அவரின் ஆட்டம் பாராட்டுக்குறியது. இறுதி போட்டியான ஹைதராபாத் அணிக்கு எதிராக நிச்சயம் நாங்கள் வெல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.