ரோகித் சர்மாவை ஏமாற்றிய அம்பயர்கள்... வைரலாகும் போட்டோ

Rohit Sharma Kolkata Knight Riders Mumbai Indians TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 10, 2022 06:10 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்று மோதின.  இப்போட்டியில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.மும்பை சார்பில் பும்ரா 5 விக்கெட், குமார் கார்த்திகேயா 2 விக்கெட், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் சவுத்தி  சற்று ஷார்ட் லெந்த் டெலிவெரியாக வீசிய கடைசி பந்தை ரோகித் சர்மா சற்று குதித்து லெக் சைட் அடிக்க முயன்றார். அப்போது அதனை கேட்ச் பிடித்துவிட்டு எட்ஜானதாக கூறி ஷெல்டன் ஜாக்சன் முறையிட்டார். இதற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். 

அதை ரீப்ளே செய்து பார்த்த போது, பந்து பேட்டில் படுவதற்கு முன்னதாகவே கால் பேடில் பட்டது போன்று அல்ட்ரா எட்ஜில் தெரியவந்தது. இதனால் ரசிகர்கள் அவுட் இல்லை என நிம்மதி அடைந்தனர். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும்படி 3வது நடுவர் அந்த பந்து பேட்டில் தான் பட்டது எனக்கூறி அவுட் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மீண்டும் அம்பயரிங் சர்ச்சை வெடிக்க தொடங்கியுள்ளது.