உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு.. மாஸ் காட்டிய ரோகித் சர்மா.. இந்திய அணி அசத்தல் ஆட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்க 18.4 ஓவர்களில் இந்தியா 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது.
இதன் பிறகு மீண்டும் ஆட்டம் தொடதொடங்கியதும் ரோகித் சர்மா தன் அதிரடி ஆட்டத்தை காட்டத் தொடங்கினார்.இதில் 66 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த ரோகித்சர்மா 83 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் 176 ரன்கள் ஆக இருந்தபோது ரோகித்சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Clean bowled ?
— ICC (@ICC) August 12, 2021
Rohit Sharma's solid knock comes to an end as he falls for 83.#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT86mZ0z pic.twitter.com/lRBibsyQWR
இதன்பிறகு களமிறங்கிய புஜாரா ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 57.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்துள்ளது.
தற்போது கேப்டன் விராட் கோலி 14 ரன்களும், கே.எல் ராகுலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.