Tuesday, May 13, 2025

கேப்டனும் இல்ல...இப்போ அணியில் இருந்தும் கழட்டிவிடப்படுகிறாரா ரோகித் - கொந்தளிக்கும் ரசிகர்கள்

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick a year ago
Report

 நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியடைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இது வரை குஜராத், ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளை எதிர்கொண்ட மும்பை அணி 3'லும் அதிர்ச்சி தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

rohit-sharma-ruled-out-from-mi-due-to-poor-form

ரசிகர்கள் பெரும் கொந்தளிப்புடன் சமூகவலைத்தளங்ளைல் கருத்துக்களை பதிவிட்டு வரும் சூழலில், தற்போது மற்றுமொரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது.

மாற்றமா..?

முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கே ரசிகர்கள் பெரும் கோபத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர் பெரிதாக விளையாடாத நிலையில், அவரை அணியில் இருந்தும் நீக்கும் முனைப்பில் மும்பை நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மைதானத்தில் ரசிகரின் திடீர் செயல் - பயந்து ஓடிய ரோகித் சர்மா..! வைரல் வீடியோ

மைதானத்தில் ரசிகரின் திடீர் செயல் - பயந்து ஓடிய ரோகித் சர்மா..! வைரல் வீடியோ

முதல் போட்டியில் 43 ரன்களை அடித்த ரோகித் அடுத்தடுத்த ஆட்டங்களில் 26 (12), 0 (1) என பெரிதாக ஏமாற்றினார். இதனால் இவருக்கு பதிலாக ஓப்பனரை மாற்றலாமா.? என்ற யோசனை மும்பை அணி நிர்வாகம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

rohit-sharma-ruled-out-from-mi-due-to-poor-form

இது இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்றாலும், தற்போதே ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.