சதம் அடித்தால் மட்டும் போதுமா பாஸ் ? கோப்பை வேணுமே? - கோலி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த ரோகித்
கேப்டன்சி வாய்ப்பு கிடைத்தது குறித்து இந்திய அணி வீரர் ரோகித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார். இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நேற்று நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் ஏற்கனவே டி20 கேப்டன் பொறுப்பேற்ற ரோகித்திற்கு தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியையும் வழிநடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது .
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அவர், நாம் ஒரு விளையாட்டு துறையில் இருந்தால், ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என நினைப்போம். என்னைப் பொறுத்தவரையில் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது தான் சாதனை. எத்தனை சதங்களை வேண்டுமானாலும் ஒரு வீரர் அடிக்கலாம்.
ஆனால் சாம்பியன் கோப்பை மற்றுமே என்றும் நமது பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் அதுதான் ஒரு அணியின் முயற்சியால் வரக்கூடியவை. விளையாட்டு போட்டிகளில் பல பிரச்னைகள் ஏற்பட்டாலும், இறுதியில் ஒரு அணியாக தான் இருக்கிறோம்.
எனவே ஒரு அணியாக ஒன்று திரண்டு எப்படி சாதிக்கின்றோம் என்பது முக்கியமானது. சரியான முறையில் வழிநடத்தி கோப்பையை வென்றுக் கொடுப்பேன் என நம்புகிறேன் எனக்கூறினார்.
தனது அடுத்த திட்டங்கள் குறித்து பேசிய ரோகித், அடுத்தடுத்து உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ளது. அதில் மட்டும் தான் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கு முன்னர் அணிக்குள் சில விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது.
முதலில் அணி வீரர்களிடம் இருந்து அழுத்தங்களை குறைக்க விரும்புகிறேன். அவர்கள் சுதந்திரமாக விளையாடுவதை உறுதி செய்தால் போதும், கோப்பை வென்றுவிடலாம் என ரோகித் கூறியுள்ளார்