ஓய்வு எப்போது? இறுக்கிப் பிடிக்கும் பிசிசிஐ - எரிச்சலடைந்த ரோஹித்!
ரோஹித் சர்மா ஓய்வு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி வருகிறது.
ரோஹித் சர்மா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2025ல் 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்று, பைனல் வாய்ப்பை இழந்தது.
தொடர்ந்து இந்திய அணி பிப்ரவரி 19ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவுள்ளது. அடுத்து, டி20 உலகக் கோப்பை தொடர், 2026ஆம் ஆண்டில் நடைபெறும். இதில், ரோஹித் சர்மாவால் விளையாட முடியாது.
பிசிசிஐ உஷார்
ரோஹித் சர்மா தற்போது பார்ம் அவுட்டில் இருக்கிறார். ஒருவேளை, சாம்பியன்ஸ் டிராபியிலும் சொதப்பும் பட்சத்தில், சாம்பியன்ஸ் டிராபி முடிந்த உடனே அவர், இந்திய அணியில் இருந்து ஓய்வுபெற அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், பிசிசிஐ உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விவாதிக்க கூட்டத்தை நடத்தினர்.
அதில் இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்றனர். மேலும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்ல என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
எந்த மாதிரி போட்டியை அணுக போகிறீர்கள்? என்பது குறித்து பிசிசிஐ இடம் தெரிவிக்க வேண்டும் என ரோஹித் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.