“போச்சே எல்லாம் போச்சே” - தோனியால் கண்கலங்கிய ரோகித் சர்மா : தோல்விக்கு காரணம் இதுதான்
இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வரும் ரோகித் சர்மாவுக்கு ஐபிஎல் தொடர் சரமாரியான அடியை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நவிமும்பையில் நேற்று நடந்த மும்பை அணியுடனான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி 0 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடர்ந்து பேட் செய்த சென்னை அணியை கடைசி பந்தில் பவுண்டரி அடித்து தோனி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 7 போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை மும்பை படைத்துள்ளது.
ஆட்டத்தின் கடைசி பந்து வரை தாங்கள் எப்படியாவது முதல் வெற்றியை பெற்றுவிடுவோம் என நம்பிக்கையுடன் இருந்த மும்பை அணி வீரர்களை தோனி ஒரு கை பார்த்துவிட்டார். ஆனால் தோற்றவுடன் ஒருநிமிடம் ரோகித் சர்மாவின் முகமே மாறிவிட்டது. காரணம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வரும் ரோகித் சர்மாவுக்கு நடப்பு தொடர் சரமாரியான அடியை கொடுத்துள்ளது.
அவர் தோல்விக்கான காரணமாக தோனியையே குறிப்பிட்டார். அணி வீரர்கள் கடுமையாக போராடினர். இறுதி வரை நாங்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினோம். அதேசமயம் தோனி எந்த நெருக்கடியிலும் எப்படி விளையாடுவார் என்று நாம் அனைவருக்கும் தெரியும். இன்னும் ஒரு 20 ரன்கள் கூட அடித்து இருந்தால் வெற்றி பெற்று இருப்போம் எனவும் ரோகித் குறிப்பிட்டார்.