தொடர்ந்து சொதப்பும் இந்திய வீரர்கள்... பயிற்சியாளரை கடுமையாக எச்சரித்த கேப்டன் ரோகித் சர்மா
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பியதால் ரசிகர்கள் கடுப்பாகினர்.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டியில் சொந்த மண்ணில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
போட்டிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இஷான் கிஷன், ஜடேஜா ஆகியோரின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டினார். அதேசமயம் தொடர்ந்து கேட்ச்களை விடுவது மிகவும் வேதனையாக உள்ளது என்றும், இந்த விஷயத்தை தொடர்ந்து செய்கிறோம் என்றும் ரோகித் கூறியுள்ளார்.
இதனை மாற்ற வேண்டும் என்பதால் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு நிறைய வேலை உள்ளது. அவர் தான் இதனை சரி செய்ய வேண்டும் எனவும் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக்கோப்பைக்கு சிறந்த ஃபீல்டிங் அணி தான் தங்களுக்கு தேவை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.