டக் அவுட்டில் சாதனைப் படைத்த ரோகித் சர்மா - இந்திய அணியில் கழட்டி விடப்படுகிறாரா?
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக உள்ளதால் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஹிட்மேன் என்று போற்றப்படும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தார்.
ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக மாறியதோடு அவர் கேப்டனாக உள்ள மும்பை அணியின் வெற்றியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியுடனான நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 7 போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை மும்பை படைத்துள்ளது.
ஏற்கனவே கடும் அழுத்தம் காரணமாக விராட் கோலி, தோனி ஆகியோர் ஐபிஎல் கேப்டன் தொடரிலிருந்து விலகிய நிலையில் ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் இதுவரை ரோகித் சர்மா 7 போட்டியில் விளையாடி 114 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
ரோகித் இதுவரை 41, 10,3,26,28,6,0 என ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 3 முறை ஒற்றை இலக்கம், 1 முறை டக் அவுட்டும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை டன் அவுட்டாகிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்களும், சீனியர்களும் அதிரடி காட்டுவதால் அவர்களை டி20 உலக கோப்பை தொடரில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரோகித் கேப்டன் என்பதால் அவரது இடத்துக்கு ஆபத்து இல்லை என்றாலும், பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக உள்ளதால் அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் ஏழ தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. இது தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அவர் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.