5 கோப்பை ஜெயித்த கேப்டன்; இம்பேக்ட் பிளேயராக ரோஹித் - அவமானப்படுத்தும் மும்பை!
ரோஹித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக மட்டும் விளையாட வைத்தது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
ரோஹித் சர்மா
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதில், நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா மீண்டும் மும்பை அணி நிர்வாகத்தால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா தனது மோசமான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். டக் அவுட்டாகி வெளியேறினார். பின் ஃபீல்டிங் செய்ய களத்திற்கு வரவே இல்லை. தொடர்ந்து அவரை இம்பேக்ட் பிளேயராக மட்டுமே மும்பை அணி பயன்படுத்தியது தெரிய வந்தது.
இம்பேக்ட் பிளேயர்
கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டியில் களமிறங்கவில்லை. இதனால் பொறுப்பு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருந்தார். இந்த சமயத்தில் வருக்கு உதவியாக ரோஹித் சர்மா இருப்பார் என்று பார்க்கப்பட்டது. கடந்த சீசனில் மும்பை அணி இரு பிரிவுகளாக செயல்பட்டது.
இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மாவுக்கு கீழும், வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழாகவும் செயல்பட்டு வந்தனர். இதனால் கடந்த சீசனின் பாதியிலேயே ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப்பட்டார். அதுவே இந்த சீசனிலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.