ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரோகித் சர்மா - என்ன ஆச்சு அவருக்கு?

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரோகித் சர்மாவுக்கு கடந்த ஆண்டு இறுதியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்பு பயிற்சி செய்த போது ஏற்பட்ட காயத்தால் டெஸ்ட், ஒருநாள் தொடர்களிலிருந்து விலகினார். 

இதனையடுத்து முழு உடல் தகுதியை அடைவதற்காக ரோகித் சர்மா பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது தான் பிசிசிஐ-யிலிருந்து ரோகித் சர்மாவுக்கு ஒரு அதிர்ச்சி கடிதம் வந்தது. அதில் உடல் பருமன் அதிகமாக இருப்பதால், அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா மன உறுதியுடன் அதற்காக தயாரானார். ஜிம்மில் பாதி நாள், உடல் எடையை குறைப்பதற்கான டயட் என ரோகித்  எடுத்த முயற்சி அவருக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. 

ரோகித் சர்மா உடல் எடையை குறைத்து தனது தாடியை வெட்டி புது மாப்பிள்ளை போல் உள்ளார். புத்தாண்டை புதிய தோற்றத்துடன் தொடங்கியுள்ள ரோகித் சர்மா தனது புகைப்படத்தை முகத்தை கொஞ்சம் மறைத்து பதிவிட்டுள்ளார்.

கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு 2022ஆம் ஆண்டு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தாண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையும், அடுத்தாண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலக்கோப்பையும் அவருக்கான சவால்களாக கண் முன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்