ஐபிஎல் தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா... கட்டாய ஓய்வில் செல்வாரா?
நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங் பார்மின்றி தவிக்கும் ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
இதனிடையே இந்த சீசனில் 5 முறை சாம்பியனான மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு படுமோசமான தோல்வியை சந்தித்தது. 14 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி,10 தோல்விகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.
இதற்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்க்கப்பட்டது.அவர் 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத நிலையில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் ரோகித் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவரை தற்காலியாக ஓய்வு எடுக்க கூறிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அப்படி ஒரு ஓய்வு ரோகித்துக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார். அவர் போதுமான இடைவெளி எடுத்தும் ஏன் சொதப்புகிறார் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.