100 தடவ அத பண்ணுவேன்.. நான் பயந்ததே அவரால தான் - மனம் திறந்த ரோஹித் ஷர்மா!
தான் சந்தித்த கடினமான பவுலர் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.
ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் அவர் துபாயில் உள்ள எப் எம் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் "நீங்கள் சந்தித்ததில் கடினமான பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் பேட்டிங் செய்ய வருவதற்கு முன் அவரின் பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் வருவேன் என்றும்,
டேல் ஸ்டெய்ன்
அவர்தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன் என்றும் அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றும் கூறினார். மேலும், டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சு வேகமாக மற்றும் அதில் ஸ்விங்கும் செய்வார்.
அவர் மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார். அவர் அனைத்து போட்டி, சீசனிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவார். டேல் ஸ்டெய்னுக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சி" என்று ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.