டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் சேர்க்கப்பட இவர்தான் காரணமா? - வெளியான உண்மை
டி20 உலக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட முக்கிய காரணமாக இருந்த நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் தமிழக வீரர் அஸ்வினுக்கு சில வருடங்களுக்குப் பின் டி20 அணியில் இடம் கிடைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா, "ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அஷ்வின் விளையாடி வருகிறார். அவர் சிறப்பாகவும் பந்து வீசுகிறார். டி20 உலகக் கோப்பையில் எங்களுக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டார்.
ஐபிஎல்லின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கு விக்கெட்டுகள் மெதுவாகவும் இருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு அந்த விக்கெட் உதவும். எனவே அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற அடிப்படையில் இடம் கிடைத்ததாக கூறினார். இதனையடுத்து அஸ்வின் அணியில் இடம் கிடைத்தது குறித்து வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம் ஒருநாள் வரும். அதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் ஒருநாள் அதனை அனுபவிப்பார்கள்" என்று ட்வீட் பதிவிட அது வைரலானது.
இந்நிலையில் அஷ்வின் மீண்டும் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஷ்வின் குறித்து இந்திய அணி மீட்டிங்கில் முதன் முதலில் பேச்சு எடுத்ததே ரோஹித் தான் என பிரபல ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ரோஹித்தின் இந்த கருத்தை கேப்டன் விராட் கோலியும் ஆமோதிக்க, அதன் பிறகே அஷ்வின் அணிக்குள் வந்திருக்கிறார். இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.