இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா இல்லை - ரகசியத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்

சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லென்ஸ் குளுசெனர் இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து இந்திய அணியை வழிநடத்தி வரும் விராட் கோலி, சில நாட்களுக்கு முன் டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

டி.20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த உள்ளதாக விராட் கோலி அறிவித்துவிட்டதால், டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியிலும் எழும்பியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எந்த வீரர் தகுந்த கேப்டனாக இருக்க வாய்ப்புள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சவுத்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லென்ஸ் குளுசெனர் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் யார் ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், என்னைப் பொருத்தவரை இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டனாக நிச்சயம் ஒருநாள் திகழ்வார்,

விராட் கோலி சிறந்த கேப்டனாக திகழ்வதற்கு எப்படி ரோகித் சர்மா உறுதுணையாக இருந்தாரோ அதே போன்று இளம் வீரர்களை கேப்டன் ஆக்கி அவருக்கு பக்கபலமாக ரோஹித் சர்மா விளங்கினால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பலமுறை சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தாண்டு டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக திகழ்ந்து டெல்லி அணியை பிளே ஆப் சுற்றுக்கு திறம்பட வழிநடத்தினார், ஆனால் எதிர்பாராதவிதமாக குவாலிபயர் 2 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி அணி தோல்வியை தழுவியது இருந்தாலும்

இவர் தனது அணியை மிகச் சிறந்த முறையில் வழி நடத்தியுள்ளார். இவர் விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக திகழ்வதற்கு அனைத்து தகுதியும் உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்த நிலையில் லென்ஸ் குளுசெனர் அதே கருத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

you may like this


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்