MI vs SRH; அதிருப்தியின் உச்சம்...அறையில் தனியாக கண்ணீர் விட்டு அழுத ரோகித் ஷர்மா!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் ரோஹித் சர்மா கண்கலங்கிய காட்சிகள் வைரலாகிறது.
அறையில் தனியாக
நடப்பாண்டில் ஐபில் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஆனா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 174 ரன்கள் இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டை இழந்து சென்ற போது அதிருப்தியில் உச்சத்தில் தலையை அசைத்துக் கொண்டே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
அழுத ரோகித்
பிறகு, போட்டி நடந்து கொண்டு இருந்தபோது இடையில் வீரர்கள் அறையில் ரோஹித் சர்மா தனிமையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் மிகவும் சோகமாக கண்கலங்கிய நிலையில் இருந்தார். அவர் கண்களை துடைத்த காட்சிகளும் நேரலையில் காட்டப்பட்டது. இந்த காட்சிகள் ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து போட்டிகளில் அவர் மிக மோசமாக விளையாடி தொடர் ஆட்டமிழப்பை சந்தித்து வருகிறார். இதுவரை நடந்த 5 போட்டிகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன் சராசரி 6.6. ஸ்ட்ரைக் ரேட் 94.3 மட்டுமே. ஆனால், மும்பை அணியின் முதல் ஏழு போட்டிகளில் ரோஹித் சர்மா 297 ரன்கள் குவித்திருந்தார்.
முதல் பாதியில் அபாரமாக விளையாடி அசத்திய ரோஹித் சர்மா இரண்டாவது பாதியில் மிக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார்.அடுத்ததாக அவர் விளையாட இருக்கும் இந்திய டி20 அணிக்காக உலகக்கோப்பை தொடரில் தான் ஃபார்ம் அவுட் ஆகி இருப்பதை எண்ணி அவர் மனம் உடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.