தோனிக்கு அடுத்து இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலி இல்லை - அதிர்ச்சி தகவல்
இந்திய அணியின் கேப்டன் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டேரன் சமி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி அதன்பின் தென்னாப்பிரிக்கா தொடருடன் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதனிடையே ஒருநாள் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் கேப்டன் பதவியில் சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற குழப்பம் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டேரன் சமி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் விராட்கோலி ஒரு கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராக பல சாதனைகளை செய்துள்ளார்
ஆனால் என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன். ஐபிஎல் போட்டிகளில் அவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பல முறை கோப்பையை வென்றுள்ளது.
தோனியை போல இவரும் அணியை வழிநடத்தி பல வெற்றியை பெற காரணமாக இருந்துள்ளார். விராட்கோலி, தோனி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூவரும் சிறப்பான முறையில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய அணியை வழிநடத்தி வெற்றிகளை பெற காரணமாக இருந்துள்ளனர். ஆனால் கோலியை விட ரோகித் தான் பெஸ்ட் என தான் நினைப்பதாக டேரன் சமி கூறியுள்ளார்.