விராட் கோலிக்கே ஆப்பு வைத்த ரோகித் சர்மா - தொட்டதெல்லாம் தூளான அதிசயம்
விராட் கோலியின் முடிவுகளுக்கு எதிர்மறையான முடிவுகளை எடுத்து ரோகித் சர்மா அதிரடி காட்டியுள்ள சம்பவம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு ஒயிட் வாஷ் செய்து பழிவாங்கப்பட்டதாக ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த தொடரில் அனைவராலும் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டவர் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் மீது மட்டும் கோலி அதிக நம்பிக்கை வைத்திருந்ததால் அஸ்வின் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வந்தார்.
அஸ்வினின் தேவை இருந்தும் பயன்படுத்தாமல் இருந்த விராட் கோலிக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஸ்வின் எதிரணி வீரர்களை திணறவைத்து அசத்தினார். மேலும் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இந்த விவகாரத்தில் கோலியை மீறி ரோகித் சர்மா தான் அஸ்வினை கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் கசிந்தது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் நியூசிலாந்து தொடர் அமைந்தது.
இதில் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பான கம்பேக் கொடுத்ததாக புதிய டி20 கேப்டன் ரோகித் சர்மாவே புகழ்ந்தார். எதிரணியை கட்டுப்படுத்தி ஆட வேண்டும் என ஒரு கேப்டன் நினைத்தால், அதற்கு முதன்மை ஆயுதமாக அஸ்வின் தான் இருப்பார்.
அவரை போன்ற வீரர்களை அணியில் வைத்திருந்தால், மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பதற்கு எப்போதுமே வாய்ப்பு இருக்கும். அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர வேண்டும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் மறைமுகமாக விராட் கோலியை தாக்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.