டெஸ்ட் போட்டி விறுவிறுப்பே இல்லையென பாகிஸ்தானில் சொன்னார்கள் - ரோஹித் சர்மா பேட்டி
டெஸ்ட் போட்டி விறுவிறுப்பே இல்லையென பாகிஸ்தானில் சொன்னார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வந்தது. இப்போட்டியின் முடிவில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று களத்தில் இறங்கியது.
இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது.
ரோஹித் சர்மா பேட்டி
இப்போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவில் மட்டுமல்ல, வேறு நாடுகளில் கூட, டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை நடப்பதில்லை. தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் இடையான டெஸ்ட் போட்டியும், 3 நாட்கள்தான் நடைபெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பு இல்லை என பாகிஸ்தானில் சிலர் கூறினர். அதனால், போட்டியை சுவாரஸ்யமாக மாற்றிவிட்டோம் என்றார்.
Indian captain Rohit Sharma reckons there is nothing wrong with Test matches ending within 3 days#cricket #rohitsharma #indiancricket #sportsnews #indvsaus #sportsnews pic.twitter.com/EWFM4l7gsj
— Sports Today (@SportsTodayofc) March 3, 2023