நான் பெரிய ரன்கள் எடுக்கவில்லை... - தனது பேட்டிங் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா...!
நான் ரொம்ப நாட்களாக பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்று தனது பேட்டிங் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
1-வது ஒருநாள் கிரிக்கெட் - இந்தியா வெற்றி
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. சமீபத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மைதானத்தில் இரு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் இறுதியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இத்தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
2-வது ஒருநாள் கிரிக்கெட் - இந்தியா வெற்றி
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கினார். ஆனால், இந்த ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. இப்போட்டியின் இறுதியில், 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி 108 ரன் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, களத்தில் இறங்கிய இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
மனம் திறந்த ரோஹித் சர்மா
இந்நிலையில், தனது பேட்டிங் ஃபார்ம் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
நான் நீண்ட நாட்களாக பெரியளவில் ரன்கள் எதுவும் குவிக்கவில்லை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அது குறித்து பெரிதாக நான் வருந்துவதில்லை. எனது பேட்டிங் ஃபார்ம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் சரியான பாதையில்தான் பயணிப்பதாக தோன்றுகிறது. கூடிய சீக்கிரமே பெரிய ரன் அடிப்பேன் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.