தொடர்ந்து சரிவை சந்திக்கும் ரோகித் கேப்டன்ஷி.... - யுவராஜ் கொடுத்த மார்க்... - ரசிகர்கள் சோகம்..!
தொடர்ந்து சரிவை சந்திக்கும் ரோகித் கேப்டன்ஷிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் மார்க் கொடுத்துள்ளார்.
இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்துப் போட்டியின் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது.
இப்போட்டியின் முடிவில், 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து, இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபாரமாக வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா சரிவு
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இதேபோல், ஐபிஎல் தொடரிலும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, கடைசி இடத்தை பிடித்தது. கேப்டன்ஷியில் மட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் பேட்டிங்கிலும் கடும் சரிவு ஏற்பட்டு பல விமர்சனத்தை பெற்று வருகிறது. டி20 உலககோப்பை போட்டியில் நெதர்லாந்துடன் மோதிய ஆட்டத்தில் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.
இதை தவிர மற்ற போட்டிகளில் அவர் அடி வாங்கினார். அதேபோல், வங்கதேசத்திற்கு எதிராக டாக்காவில் வெறும் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இவரின் பேட்டிங் சொதப்பலை பார்த்த ரசிகர்கள், டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியை பார்த்தது போல், ஒருநாள் போட்டியிலும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
யுவராஜ் சிங் கொடுத்த மார்க்
இந்நிலையில், கோப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மார்க் கொடுத்துள்ளார். ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன ரசிகர் யுவராஜ் சிங்கிடம் கேட்டுள்ளார்.
அவருக்கு யுவராஜ், '10/10' என்று மதிப்பிட்டு டுவிட்டரில் பதில் டிவிட்டரில் பதில் கொடுத்துள்ளார்.
ரோகித் சர்மா மீண்டும் பழைய படி ஃபார்ம்க்கு திரும்ப வேண்டும் என்பது ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.