கட்டை விரல் காயம் - வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு திரும்ப வருகிறார் ரோஹித் சர்மா...!

Rohit Sharma Cricket Indian Cricket Team
By Nandhini Dec 17, 2022 06:22 AM GMT
Report

கட்டை விரல் காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு திரும்பி வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் ஷர்மா காயம்

சமீபத்தில் 2வது ஒரு நாள் போட்டியில் வங்காளதேசமும், இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், முகமது சிராஜ் வீசிய 2வது ஓவரை அனமுல் ஹக் எதிர்கொண்டார்.

அப்போது பந்து அவருடைய பேட்டில் பட்டு எட்ஜ்ஜானது. அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவை நோக்கிச் சென்றது. அதனை கேட்ச் எடுக்க ரோஹித் முயற்சி செய்த போது, பந்து அவரது கையில் பட்டு நழுவியது. இதனால் ரோஹித் பலத்த காயம் ஏற்பட்டு கைகளை உதறியபடி அங்கிருந்து வெளியேறினார்.

இப்போட்டியில், காயம் காரணமாக ரோஹித் ஷர்மா, கடைசியில் பேட்டிங் செய்ய வந்தார்.கையில் காயம் ஏற்பட்டபோதிலும், வலியைத் தாங்கிக்கொண்டு ரோஹித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.

rohit-sharma-indian-cricket-team

அணிக்கு திரும்பும் ரோகித் ஷர்மா

இந்நிலையில், வரும் டிசம்பர் 22ம் தேதி மிர்பூரில் தொடங்கும் வங்காளதேசத்துக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2வது ஒருநாள் போட்டியில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியையும், முதல் டெஸ்ட் போட்டியையும் ரோஹித் தவறவிட்டார். இதனையடுத்து, கடந்த 14ம் தேதி தொடங்கிய வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டை தவிர்க்குமாறு மருத்துவர்கள் ரோகித் ஷர்மாவை கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து அவர் அப்போட்டியில் விளையாடவில்லை. ரோகித் ஷர்மா இல்லாததால் இந்திய கிரிக்கெட் அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தி வருகிறார். ரோகித் ஷர்மாவிற்கு பதில் பேட்டர் அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் கடைசி போட்டி ரோஹித்தின் சொந்த மண்ணில் விளையாடும் முதல் டெஸ்ட்டாகும். இதுவரை இந்திய அணிக்கு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்திருக்கிறார்.

2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 404 ரன்கள் குவித்து வங்கதேசத்தை 150 ரன்களுக்கு சுருட்டியது. 2வது இன்னிங்சில் வங்கதேசத்துக்கு 513 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா இதுவரை வங்கதேசத்திடம் டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.