T20 உலகக் கோப்பை தொடர் - வெறும் 116 ரன்களை குவித்த ரோஹித் சர்மா - ரசிகர்கள் கண்டனம்
T20 உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 109 பந்துகளை சந்தித்து 116 ரன்களே இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குவித்துள்ளதால், ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்தியா தோல்வி
டி20 உலகக்கோப்பையில் இன்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து, பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரை சதம் கடந்தார். இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது. இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதனையடுத்து, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
ரோஹித் சர்மா
T20 உலகக் கோப்பைப் போட்டியில், மொத்தமாக 109 பந்துகளை சந்தித்து 116 ரன்களை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குவித்துள்ளார்.
1. ரோஹித் சர்மா- 109 பந்துகளில் 116 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட்- 106
2. KL ராகுல்- 106 பந்துகளில் 128 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட்-120
தற்போது இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Indian openers in this #T20WorldCup
— TukTuk Academy (@TukTuk_Academy) November 10, 2022
•Rohit Sharma- 116 runs off 109 balls, Strike rate- 106?
•KL Rahul- 128 runs off 106 balls, Strike rate-120?
Combined- 244 runs off just 215 balls with gigantic strike rate of 113
What a performance by these academy beasts? #INDvENG