2-வது டி20 கிரிக்கெட் போட்டி - சர்வதேச அளவில் சாதனை படைத்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா...!

Rohit Sharma
By Nandhini Oct 03, 2022 06:27 AM GMT
Report

2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

2-வது டி20 போட்டி

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளன.

இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான 2வது டி.20 போட்டி அசாம் மாநிலம், கவுஹாத்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றியது.

இரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி வரும் செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. ரோஹித் சர்மா சாதனை நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் ரோஹித் சர்மா விளையாடியதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது, 400 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

Rohit Sharma

சர்வதேச அளவில் வெளியான பட்டியலில் -

முதல் இடத்தில் வீரர் பொல்லார்ட் - 614 போட்டிகள்,

2-வது இடத்தில் வீரர் பிராவோ - 556 போட்டிகள்,

3-வது இடத்தில் வீரர் சோயப் மாலிக் - 481 போட்டிகள்,

4-வது இடத்தில் வீரர் கிறிஸ் கெய்ல் - 463 போட்டிகள்,

5-வது இடத்தில் வீரர் சுனில் நரைன் - 435 போட்டிகள்,

6-வது இடத்தில் வீரர் ரவி போபரா - 429 போட்டிகள்,

7-வது இடத்தில் ரசல் - 428 போட்டிகள்,

டேவிட் மில்லர் ஆகியோர் ரோகித்துக்கு முன்னர் உள்ளனர்.

இந்திய அளவில் ரோகித்துக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 368 போட்டிகளில் ஆடி 2வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ்.தோனி 361 போட்டிகளில் ஆடி 3வது இடத்திலும், விராட் கோலி 354 போட்டிகள், சுரேஷ் ரெய்னா 336 போட்டிகளில் 4-வது மற்றும் 5-வது இடத்திலும் இருக்கின்றனர்.