5 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியது திருப்பு முனையாக அமைந்தது - வெற்றி குறித்து ரோகித் சர்மா பேட்டி

Rohit Sharma Indian Cricket Team
By Nandhini Sep 29, 2022 07:40 AM GMT
Report

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது.

இதனையடுத்து, நேற்று இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது இந்தியா

இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி, 110 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சூர்யகுமார் 50 ரன்களும், (33 பந்துகள்), ராகுல் 51 ரன்களுடன் (56 பந்துகள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

rohit-sharma-indian-cricket-team

ரோஹித் சர்மா பேட்டி

இந்நிலையில் இப்போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், விக்கெட் மிகவும் கடினமாக இருந்தது.

இதுபோன்ற விளையாட்டில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்கிறீர்கள். கடினமான சூழ்நிலையில் அணி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், விரைவான நேரத்தில் 5 விக்கெட்டுகளைப் பெற்றோம். அதுதான் இப்போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கான சரியான காட்சி என்று கூறினார்.