பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் சிறப்பான பாதைக்கு மீண்டும் திரும்புவார்கள் - ரோஹித் சர்மா நம்பிக்கை

Rohit Sharma Indian Cricket Team
By Nandhini Sep 26, 2022 01:11 PM GMT
Report

பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் சிறப்பான பாதைக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது. இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது.

டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

rohit-sharma-indian-cricket-team

கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கை

இந்நிலையில், இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார்.

இது ஒரு சிறந்த தருணம். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம். அதை சிறப்பாக செய்து முடித்தோம்.

வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்து வருவது மிகப்பெரிய பலமாகும். சில நேரங்களில் நிறைய விஷயங்களை செய்யும்போது தவறு செய்வோம். என்ன தவறு செய்தோம் என்பதை உணர்ந்து அதிலிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியம். பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் சிறப்பான பாதைக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.