எதிர் அணி வீரர்களை பயம் காட்டி தெறிக்கவிட்ட ரோகித் சர்மா - உற்சாகத்தில் ரசிகர்கள்

Thahir
in கிரிக்கெட்Report this article
மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
மேற்கிந்திய அணிகளுடனான மூன்று ஒரு நாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன் முதல் நாள் ஆட்டம் அஹமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் திணறின.
இதையடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்திய அணி 176 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சாளர் சாஹல் 4 விக்கெட்டுகளையும்,வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர்.
60 ரன்களில் ஆட்டம் இழந்தார் ரோகித் சர்மா.இதன் பின் களம் இறங்கிய விராட் கோலி 8 ரன்களிலும்,ரிஷப் பண்ட் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - தீபக் ஹுடா கூட்டணி நிதானமாக ஆடி 28 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.