தோனியால் என் வாழ்க்கை மாறால நான் என்னென்ன பண்ணேன்னு தெரியுமா? - கொந்தளித்த ரோகித் சர்மா

Rohit Sharma
By Irumporai Mar 22, 2023 07:14 AM GMT
Report

தோனி ஓப்பனிங் இறக்கியதால் எனது வாழ்க்கை மாறவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் ரோகித் சர்மா கூறியுள்ளர்.

  ரோகித் சர்மா

தற்போதைய இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் சிறந்தவராக இருப்பவர் ரோகித் சர்மா குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவர் அடித்த சதங்கள் அவரை தனி ஸ்டாராக காட்டியது.

ஆரம்பகாலத்தில் ஆல்ரவுண்டராக இருந்த ரோகித் ஆறாவது மற்றும் ஏழாவது பேச்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார் இதனால் அவரது திறமை வெளிஉலகுக்கு தெரியாமல் போனது , இதனால் பல விமர்சனங்களை சந்தித்தார். அப்போதைய கேப்டனாக இருந்த தோனி ரோஹித் மீது நம்பிக்கை வைத்து ஓபனிங் இறக்கினார் அதன்பிறகு ரோஹித் உச்சம் பெற்றார் என்றே கூறலாம் .

தோனியால் என் வாழ்க்கை மாறால நான் என்னென்ன பண்ணேன்னு தெரியுமா? - கொந்தளித்த ரோகித் சர்மா | Rohit Sharma Gave Statement Dhoni Open Innings

அதிகரன்கள்

இதுவரை ரோகித் ஷர்மா இந்திய அணிக்காக இதுவரை 235 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். அதில் 155 இன்னிங்ஸ்கள் ஓபனிங் செய்திருக்கிறார். 30 சதங்கள் 48 அரைசதங்கள் உட்பட, மொத்தம் 9,795 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் அடித்திருக்கிறார். அதில் 28 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் என 7,777 ரன்கள் ஓபனிங் இறங்கி அடித்தவையாகும் இந்த நிலையில் ரோகித்சர்மாவின் கிரிகெட் பயணத்தை மாற்றியது தோனிதான் என்ற பேச்சு தற்போது பேசப்படும் நிலையில் இதனைபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தோனி காரணம் இல்லை

அதில் 2013ஆம் ஆண்டு என்னை ஓப்பனிங் பேட்டிங் இறங்குவதற்கு அழைத்தார்கள். அழைத்த உடனேயே, வெறுமனே ஓபனிங் இறங்கிவிடவில்லை. அதற்கு சில நாட்கள் முன்பு தொடர்ச்சியாக ஓப்பனிங் இறங்கிய ஜாம்பவான்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? மற்றும் பவர்-பிளே ஓவர்களில் என்னென்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்று வீடியோக்களை வைத்து பல ஆய்வுகள் செய்த பிறகே களம் இறங்கினேன்.

வெறுமனே ஓப்பனிங் இறங்கியிருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். பல ஆய்வுகளை செய்த பிறகே என்னால் இவ்வளவு வெற்றிகரமாக இருக்க முடிந்திருக்கிறது. என்னுடைய உழைப்பு நிறைய இருக்கிறது ஆக தனது வெற்றி பயணத்திற்கு தோனி மட்டும் காரணம் அல்ல என்பதை ரோகித் சுசகமாக தெரிவித்துள்ளார்.