தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்த ரோகித் : நடந்தது என்ன?

Dinesh Karthik T20 World Cup 2022
By Irumporai 2 வாரங்கள் முன்

தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்துக்கொண்டு ரோகித் சர்மா திட்டிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய அணி தோல்வி

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி கண்டது. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்களை விளாசினார்.

தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்த ரோகித் : நடந்தது என்ன? | Rohit Sharma Dinesh Karthik In India Vs Australia

இமாலய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 211 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்வியையே நம்ப முடியாத ரசிகர்களுக்கு, ரோகித் சர்மாவின் கடும் கோபத்தையும் காண முடிந்தது.

கழுத்தை நெறித்த ரோகித்

இந்த நிலையில், ஆட்டத்தின் 11.6 ஓவரின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்தில் மேக்ஸ்வெல் எட்ஜாகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். பந்து பேட்டில் பட்ட சத்தம் அனைவருக்கும் கேட்டு அவுட் கேட்ட போதும், தினேஷ் கார்த்திக் அமைதியாக இருந்தார்.

இதனால் கோபமடைந்த ரோகித், தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்துக்கொண்டு " ஒலுங்கா ரிவ்யூவ் கேட்க மாட்டீயா" என கேட்டார். எனினும் ரோகித் சர்மா இதனை நிஜமான கோபத்துடன் செய்யவில்லை. விளையாட்டாக தான் செய்வது போன்று இருந்தது. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் விடீயோவை பகிர்ந்து வருகின்றனர்