எதுக்கு உனக்கு அவசரம்..ரோஹித் சர்மா செயலால் கடுப்பான ரசிகர்கள்..!

RohitSharma INDVsSL SLVsIND DeclaredMatch RavindraJadejaCenturis
By Thahir Mar 06, 2022 12:58 AM GMT
Report

இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

முதலில் நடந்த டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியின் முதல் போட்டி 4ம் தேதி துவங்கியது.

மொஹாலி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா (29 மற்றும் மாயன்க் அகர்வால் (33) ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய விராட் கோலி,ரிஷப் பண்ட்,ஹனுமா விஹாரி அதிரடியாக விளையாடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது.

ரவீந்திர ஜடேஜா 45 ரன்கள் மற்றும் அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தார்.

அஸ்வின் (61)ரன்களும் ரவீர்திர ஜடஜோ 175 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 575 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கி இலங்கை அணி இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்தது.

இந்தநிலையில், இந்த போட்டியில் 175 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா, அதை இரட்டை சதமாக மாற்றுவதற்குள், ரோஹித் சர்மா திடீரென டிக்ளேர் செய்வதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மிகசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 200 ரன்கள் அடிக்கும் வரை ரோஹித் சர்மா காத்திருந்து அதன்பின் தான் டிக்ளேர் செய்வதாக அறிவித்திருக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.