இந்திய கேப்டன்களில் யாரும் படைக்காத சாதனைப் படைத்த ரோகித் சர்மா - குவியும் வாழ்த்து..!
இந்திய கேப்டன்களில் யாரும் படைக்காத சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய 2வது நாள் டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான முதல் போட்டி நேற்று முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
சாதனைப் படைத்த ரோகித் சர்மா -
நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது. இப்போட்டியில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி 171 பந்துகளில் ரோகித் சதம் அடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இப்போட்டில், அடித்த சதத்தால் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்திருக்கிறார். கேப்டனாக டெஸ்ட் ,ஒரு நாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சதம் அடித்து முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Rohit Sharma showing his class in tough situation for India.pic.twitter.com/L9hE4wYHSd
— Johns. (@CricCrazyJohns) February 10, 2023
Rohit Sharma. #RohitSharma #Cricket #CricketTwitter pic.twitter.com/e0Zat9OAr1
— RVCJ Sports (@RVCJ_Sports) February 9, 2023