மைதானத்திற்குள் ஓடி வந்து திடீரென ரோகித் சர்மாவை கட்டியணைத்த சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ...!

Rohit Sharma Cricket Viral Video
By Nandhini Jan 22, 2023 09:46 AM GMT
Report

மைதானத்திற்குள் ஓடி வந்து திடீரென ரோகித் சர்மாவை கட்டியணைத்த சிறுவனின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரோகித் சர்மாவை கட்டியணைத்த சிறுவன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நேற்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி மைதானத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, போட்டியின் நடுவே ஒரு சிறுவன் மைதானத்திற்குள் நுழைந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்தான்.

ஓடி வந்த சிறுவன் திடீரென ரோகித் சர்மாவை கட்டியணைத்தான். ஆனால், சற்று நேரத்தில் பாதுகாவலர்கள் ஓடி வந்து அச்சிறுவனை பாய்ந்து பிடித்தனர். இதனால், பதறிப்போன ரோகித் சர்மா... அவனை விடுங்கள்... சிறுவனுக்கு காயம் ஏதும் ஏற்படுத்தாதீங்க... என்று கூறினார்.

இதனையடுத்து, அச்சிறுவனை பாதுகாவலர்கள் கையைப் பிடித்து கொண்டு வந்து மைதானத்தை விட்டு வெளியே அனுப்பினர்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள்... ரோகித் சர்மாவின் செயலை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.     

rohit-sharma-cricket-fan-hugging-viral-video