தொடரும் சாதனை...இதனால் தான் இவரு ஹிட்மேன் - Rohit Sharma..!!
நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்து சாதனைகளை புரிந்து வருகின்றார்.
10000 ரன்களை கடந்த ரோகித்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன் மீது தொடர்ந்து வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பேட்டிங் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் நேபாள, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக தொடர்ந்து அரை சதங்கள் அடித்து அசத்தியிருக்கும் ரோகித் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மற்றொரு மைல்கல்லை அடைந்தார்.
இலங்கை அணிக்கு எதிராக 22 ரன்களை அவர் எடுத்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை ரோகித் சர்மா கடந்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களில் சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, விராட் ஆகியோரை அடுத்து 10000 ரன்களை அடித்த வீரராக ரோகித் முன்னேறியுள்ளார்.
200 கேட்சுகள் பிடித்த ரோகித்
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றுமொரு அசாத்திய சாதனையை படைத்துள்ளார்.
Rohit Sharma completed 200 catches in International cricket.
— Johns. (@CricCrazyJohns) September 15, 2023
- Captain, Leader, Legend, Hitman. pic.twitter.com/GuHjXwo9RT
அக்சர் படேல் பந்துவீச்சில், வங்காளதேச வீரர் மேகிடி ஹாசன் அடித்த பந்தை கேட்ச் செய்த போது, கேப்டன் ரோகித் சர்வதேச கிரிக்கெட்டில் 200 கேட்ச்களை நிறைவு செய்திருக்கிறார். இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே தடுமாறி வரும் வங்காளதேச அணி தற்போதுவரை 35 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.